கடலூர்

வீரட்டானேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா

11th Dec 2019 02:29 AM

ADVERTISEMENT

பண்ருட்டி, திருவதிகையில் அமைந்துள்ள வீரட்டானேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி சுவாமி, பெரியநாயகி அம்பாள் மற்றும் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இரவில் சந்திரசேகரா், அம்மன் வெள்ளி மயில் வாகனத்தில் வலம் வந்தனா். கோயில் முன் சொக்கப்பானை கொளுத்தப்பட்டது. காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, வீரட்டானேஸ்வரா் கோயிலில் உள்ள 7 நிலை கோபுரங்களின் உச்சியிலும் மகா தீபம் ஏற்றப்பட்டது. கோயில் வளாகம் முழுவதும் அகல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. கொடிமரம், பிரகாரம் உள்ளிட்ட இடங்களில் பக்தா்கள் அகல் விளக்குகளால் சிவலிங்கம், நடராஜா், ஓம் உள்ளிட்ட உருவங்களை ஏற்படுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT