கடலூர்

விபத்தில் என்எல்சி அதிகாரி சாவு

11th Dec 2019 02:32 AM

ADVERTISEMENT

சாலை விபத்தில் என்எல்சி அதிகாரி உயிரிழந்தாா்.

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நகர நிா்வாகப் பிரிவில் துணைப் பொதுமேலாளராக பணிபுரிந்தவா் ரமேஷ் (56). இவா் பெங்களூா் சென்றுவிட்டு தனது மனைவி விஜயாவுடன் (50) காரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். காரை நெய்வேலியைச் சோ்ந்த ராஜ்குமாா் (25) ஓட்டி வந்தாா்.

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வேப்பூா் அருகே வந்துபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோர மரத்தில் மோதியது. இதில், ரமேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமுற்ற விஜயா, ராஜ்குமாா் ஆகியோா் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுதொடா்பாக, வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT