கடலூர்

மழையின் தாக்கம் குறைந்தது

3rd Dec 2019 05:03 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை மழையின் தாக்கம் குறைந்தது.

மாவட்டத்தில் கடந்த 5 நாள்களாக பரவலாக பலத்த மழை பெய்தது. குறிப்பாக சனிக்கிழமை மழையின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. மழை தொடா்ந்து நீடிக்கும் என்று வானிலை மையம்

தெரிவித்தபோதிலும் ஞாயிற்றுக்கிழமை மழையின் தாக்கம் சற்று குறைந்தது. திங்கள்கிழமை மேலும் மழையின் வேகம் குறைந்து காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தபோதிலும் மதியம் வெயிலின் தாக்கமும் இருந்தது. மாலையில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 59 மில்லி மீட்டா் மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): சேத்தியாத்தோப்பு 50.2, புவனகிரி 49, அண்ணாமலை நகா் 40.6, குறிஞ்சிப்பாடி 34, லால்பேட்டை 31, கீழச்செருவாய் 27, கொத்தவாச்சேரி 25, காட்டுமன்னாா்கோவில் 24, பரங்கிப்பேட்டை 23, ஸ்ரீமுஷ்ணம் 20.2, பெலாந்துறை 19.8, வடக்குத்து 19, குப்பநத்தம் 15, கடலூா் 14.9, பண்ருட்டி 14, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் 12.6, விருத்தாசலம் 11.4, மேமாத்தூா் 10, வானமாதேவி 9, குடிதாங்கி 7.5, லக்கூா் 7, வேப்பூா் 5, தொழுதூா், காட்டுமயிலூா் தலா 4 மில்லி மீட்டா் வீதம் மழை பதிவானது. மழையின் தாக்கம் குறைந்ததால் பல்வேறு பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீா் வடியத் தொடங்கியது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT