நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நகர நிர்வாகம் சார்பில் ரூ.45 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன தூய்மை நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது.
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்து ஊராட்சி அருகே சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நுழைவு வாயில் (ஆர்ச் கேட்) அமைந்துள்ளது. இந்த நுழைவு வாயில் வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.
இந்தப் பகுதியில் பொதுமக்களின் நலன் கருதி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நகர நிர்வாகத் துறை சார்பில் ரூ.45.25 லட்சத்தில் தூய்மை நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு ஆண்கள், பெண்களுக்கு தனித் தனி கழிப்பறைகள், குளியலறைகள், ஆடை மாற்றும் அறைகள், ஆண்கள் பகுதியில் தானியங்கி முறையில் சுத்தப்படுத்தும் வசதி, பெண்கள் பகுதியில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் அறை உள்ளிட்ட நவீன வசதிகள் உள்ளன.
இந்த நவீன தூய்மை நிலையத்தை என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நகர நிர்வாகத் துறை தலைமைப் பொது மேலாளர் எஸ்.ஆர்.சேகர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நகர நிர்வாகத் துறையின் உயர் அதிகாரிகள், பொறியாளர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.