சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் "ஃபிட் இந்தியா' நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பொதுமக்களின் உடல் சார்ந்த உழைப்பையும், விளையாட்டையும் ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு சார்பில் "ஃபிட் இந்தியா' இயக்கம் தில்லியில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
இந்த விழா, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
அப்போது, பல்கலைக்கழக துணைவேந்தர் வே.முருகேசன் தலைமையில், பதிவாளர் நா.கிருஷ்ணமோகன் முன்னிலையில், புல முதல்வர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, இயக்குநர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு உடல்பயிற்சி செய்தனர்.
மேலும், "உடல் உறுதியைப் பேணுவோம்' என உறுதிமொழி ஏற்றனர்.