வடலூரை புனித நகரமாக அறிவிக்கக் கோரி, சுத்த சன்மார்க்க விழிப்புணர்வு எழுச்சிப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
வடலூர் நான்கு முனை சந்திப்பில் இருந்து தொடங்கிய பேரணிக்கு ஆசிரியர் (ஓய்வு) ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பேரணியை சாது சிவராமன் தொடக்கி வைத்தார். விழுப்புரம் ஜெய.அண்ணாமலை பரதேசி, மேட்டுக்குப்பம் புலவர் க.ஞானதுரை,
சீனு.ஜோதிராமலிங்கம், க.கண்ணதாசன், வடக்கு மேலூர் ராம.கோதண்டபாணி, பேர்பெரியான்குப்பம் ந.செந்தில்முருகன், கடலூர் ராஜதுரைராணி, வடலூர் குருபக்கிரிசாமி, கருங்குழி மு.கிஷோர்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடலூர் எம்.கே.பார்த்திபன் வரவேற்றார்.
இந்தப் பேரணியில் சன்மார்க்க அன்பர்கள், சாதுக்கள், ஆன்மிக சிந்தனையாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேரணி சத்திய ஞான சபையில் நிறைவடைந்தது.