சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நுண்கலைப் புலம் சார்பில், "கலாசார பரிவர்த்தனையில் இசையும், நடனமும்' என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் லிப்ரா அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கை பல்கலைக்கழகத் துணைவேந்தர் வே.முருகேசன் தொடக்கிவைத்துப் பேசினார். சீர்காழி கோ.சிவசிதம்பரம் சிறப்புரையாற்றினார். விழாவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இசைத் துறையைச் சேர்ந்த கிருபாசக்தி கருணா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நுண்கலைப் புல முதல்வர் கே.முத்துராமன் வாழ்த்திப் பேசினார். இசைத் துறைத் தலைவர் ஆர்.கே.குமார் வரவேற்றார். உதவிப் பேராசிரியர் கே.பிரகாஷ் நன்றி கூறினார்.
விழாவில் பல்வேறு மாநிலங்கள், வெளி நாடுகளைச் சேர்ந்த இசைத் துறை ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்களான உதவிப் பேராசிரியர்கள் கே.பிரகாஷ், ஜே.வேணுகோபால் ஆகியோர் செய்திருந்தனர்.