பண்ருட்டி வட்டம், சேமக்கோட்டை கிராமத்தில் காவல் துறை சார்பில் குற்றத் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், சேமக்கோட்டை கிராமத்தில் வசிக்கும் சகோதரர்கள் இருவரது வீடுகளின் கதவை உடைத்து 10 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதையடுத்து, சேமக்கோட்டை கிராமத்தில் உள்ள அங்காளம்மன்கோயில் திடலில் குற்றத் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில், கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.