நெய்வேலி ஜவஹர் அறிவியல் கல்லூரியில் இளநிலை வணிகவியல், வணிக மேலாண்மையியல் துறைகளில் பயிலும் மாணவர்களுக்கான கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் வெ.தி.சந்திரசேகரன் தலைமை வகித்தார். என்எல்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் பாலகுருநாதன் வரவேற்றார்.
நெய்வேலியில் படித்து உலக வங்கி நிதி மேலாளராக உள்ள ரஃபிலால் கமால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உலக வங்கியின் செயல்பாடுகள் குறித்தும், வணிகவியல், வணிக மேலாண்மையியல் துறைகளில் படிக்கும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்தும், தனது அனுபவங்கள் குறித்தும் பேசினார்.
பின்னர், அவர் மாணவர்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு பதிலளித்தார். பேராசிரியர் விவேகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வணிக மேலாண்மையியல் துறைப் பேராசிரியர் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார்.