கடலூர்

மரத்தின் மீது கார் மோதியதில் ஒருவர் பலி

28th Aug 2019 09:57 AM

ADVERTISEMENT

வந்தவாசி அருகே மரத்தின் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
சேத்துபட்டை அடுத்த சவரப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் திரேஸ்ராஜ் (55). திருவண்ணாமலை பெருமாள் நகரைச் சேர்ந்த இவரது நண்பர் ஆனந்தன் (42). அதிமுக பிரமுகர்களான இவர்கள், திங்கள்கிழமை காரில் சென்னை சென்றனர். காரை சேத்துபட்டைச் சேர்ந்த யேசுரத்தினம் (25) ஓட்டினார். பின்னர் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஊர் திரும்பிக் கொண்டிருந்
தனர். 
வந்தவாசி-சேத்துபட்டு சாலை, ஆராசூர் கூட்டுச் சாலை அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோர புளிய மரத்தில் கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே திரேஸ்ராஜ் இறந்தார். பலத்த காயமடைந்த ஆனந்தன், யேசுரத்தினம் இருவரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 
பின்னர் தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் இருவரும் சேர்க்கப்பட்டனர். 
இதுகுறித்து ஆனந்தன் அளித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT