கடலூர்

பல்கலை.யில் சுதந்திர தின விழா

16th Aug 2019 09:34 AM

ADVERTISEMENT

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் 73-ஆவது சுதந்திர தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் வே.முருகேசன் தேசியக் கொடியேற்றி வைத்து, தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தேசிய மாணவர் படை அணிவகுப்புக்கான பயிற்சியை மாணவர் படை கமாண்டிங் ஆபிஸர் 6 டி.என்.பட்டாலியன் கர்னல் சிவராஜ், கமாண்டிங் ஆபிஸர் 14 டி.என் சி.டி.சி. கர்னல் மணீஷ் மல்கோத்ரா, கேப்டன் ஆர்.கனகராஜ், எம்.சீமான், லெப்டினன்ட்கள் சேவி, ரவிச்சந்திரன், பி.பிரேம்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
விழாவில் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள், ரத்த தானம் செய்த மாணவர்கள், அணிவகுப்பில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு துணைவேந்தர் வே.முருகேசன் சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
விழாவில் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், மொழிப் புல முதல்வர் வி.திருவள்ளுவன், டி.சார்லஸ், பதிவாளர் ச.கிருஷ்ணமோகன், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி செல்வநாராயணன், புல முதல்வர்கள், பல்கலைக்கழக அதிகாரிகள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT