கடலூர்

தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்த தானம்

16th Aug 2019 09:30 AM

ADVERTISEMENT

சுதந்திர தினத்தையொட்டி, தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சுதந்திர தினத்தை முன்னிட்டும், தீவிரவாதத்துக்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரசாரத்தின் ஒரு கட்டமாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கடலூர் வடக்கு மாவட்டம், கடலூர் அரசு தலைமை மருத்துவமனை ஆகியவை சார்பில் கடலூர் மருத்துவமனையில் ரத்த தானம் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு அந்த அமைப்பின் மாவட்டச் செயலர் அ.காதர் பாஷா தலைமை வகித்தார். இதில், 40 பேர் கலந்து கொண்டு ரத்தம் வழங்கினார். இதைத் தொடர்ந்து, ரத்தம் அளித்தவர்கள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் எஸ்.சேட் முகமது, பொருளாளர் எச்.உமர்பரூக், துணைத் தலைவர் யாஸின், துணைச் செயலர்கள் ஜியாவுர் ரஹ்மானி, யாஸர், ஹெரிப்பாபு, மருத்துவரணிச் செயலர் நூர்மைதின், தொண்டரணிச் செயலர் அப்துல்வஹாப் உள்ளிட்டோர் கலந்து 
கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT