கடலூர்

சுதந்திர தினம்: கோயில்களில் சமபந்தி விருந்து

16th Aug 2019 09:34 AM

ADVERTISEMENT

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோயில்,  திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில்களில் சிறப்பு வழிபாடு, சமபந்தி விருந்து வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கோயில் செயல் அலுவலர் ராஜா சரவணகுமார் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட அதிமுக அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், சிதம்பரம் நகரச் செயலர் ஆர்.செந்தில்குமார், சி.சி.எம்.எஸ். தலைவர் டேங்க் ஆர்.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக சிதம்பரம்  சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் கலந்து கொண்டு, சமபந்தி விருந்தைத் தொடக்கி வைத்து, பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் பன்னீர்செல்வம், அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளர் தில்லை கோபி, ஆவின் முன்னாள் தலைவர் சுரேஷ்பாபு, பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலர் அசோகன், ஒன்றிய அவைத் தலைவர் ராசாங்கம், மாவட்ட மீனவர் பிரிவு செயலர் வீராசாமி, அவைத் தலைவர் தில்லை சேகர், கருப்பு ராஜா, மகளிரணி பானு, நகர எம்.ஜி.ஆர். மன்றச் செயலர் பாரி, மாவட்ட பிரதிநிதி நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வீரட்டானேஸ்வரர் கோயிலில்...
இந்து சமய அறநிலையத் துறை சார்பில்,  திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு, சமபந்தி விருந்து வியாழக்கிழமை நடைபெற்றது.
கடலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ஸ்ரீரமேஷ் தலைமை வகித்தார்.  டிஎஸ்பி. நாகராஜன், துணை வட்டாட்சியர் சுந்தரம், கோயில் செயல் அலுவலர் ஜெ.சீனுவாசன், வர்த்தக சங்கத் தலைவர் டி.சண்முகம், செயலர் வி.வீரப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT