கடலூர்

சிதம்பரம், நெய்வேலி பகுதிகளில் சுதந்திர தின விழா

16th Aug 2019 09:29 AM

ADVERTISEMENT

சிதம்பரம், நெய்வேலி பகுதிகளில் உள்ள  அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 73-ஆம் ஆண்டு சுதந்திர தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
சிதம்பரம் நகராட்சி: சிதம்பரம் நகராட்சியில் நகராட்சி ஆணையர் பி.வி.சுரேந்திரஷா தேசியக் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார். சிதம்பரம் நகரக் காவல் நிலையத்தில் டி.எஸ்.பி. எஸ்.கார்த்திகேயன் தேசியக்கொடியேற்றினார். வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஹரிதாஸ் தேசியக் கொடியேற்றினார்.
கல்வி நிறுவனங்களில்: இதேபோல, காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே. இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு கல்லூரித் தலைவர் எம்.ஆர்.கே.பி.கதிரவன்  தலைமை வகித்தார். எம்.ஆர்.கே. நினைவு கல்வி அறக்கட்டளை தாளாளர் எம்.ஆர்.தெய்வசிகாமணி கலந்து கொண்டு தேசிய கொடியேற்றினார். கல்லூரி முதல்வர் கோ.ஆனந்தவேலு, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளித் தாளாளர் வீனஸ் எஸ்.குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிதம்பரம் கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.கார்த்திகேயன் கலந்து கொண்டு, தேசியக் கொடியேற்றினார். நகரக் காவல் நிலைய ஆய்வாளர் சி.முருகேசன், காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் ரூபியாள்ராணி முன்னிலை வகித்தார். துணை முதல்வர் கஸ்பார்ராஜ் வரவேற்றார். தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் நன்றி கூறினார். 
ராமகிருஷ்ணா வித்யாசாலை மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் எம்.கே.ராஜாராமன் தேசியக் கொடியேற்றினார். பள்ளி நிர்வாகக் குழுத் துணைத் தலைவர் எஸ்.ஆர்.திருநாவுக்கரசு, தலைமை ஆசிரியர் மு.சிவகுரு, முன்னாள் ராணுவ வீரர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
சிதம்பரம் கனகசபை நகரில் உள்ள ஸ்ரீ குருஞான சம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பள்ளி தாளாளர் சபாநாயகம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஜெயக்குமார் வரவேற்றார்.
சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் குழுச் செயலர் எம்.ஆர்.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில், வங்கி மேலாளர் எஸ்.தாமரைச்செல்வி  தேசியக் கொடியேற்றினார். பள்ளித் தலைமை ஆசிரியர் சி.உமாராணி வரவேற்றார். உதவித் தலைமை ஆசிரியர் ஏ.முத்துக்கருப்பன் நன்றி கூறினார்.
சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவி பி.நிருத்தயஸ்ரீ தேசியக் கொடியேற்றினார். பள்ளிக் கூடுதல் செயலர் எஸ்.கஸ்தூரி தலைமை வகித்தார். விழாவில் பள்ளி முதல்வர் ஜி.சக்தி, துணை முதல்வர் ஜி.ஷீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
சிதம்பரம், வயலூரில் உள்ள காமராஜ் மெட்ரிக் மேல்நிலை சிறப்புப் பள்ளியில், மதுரை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி முன்னாள் துணைப் பொது மேலாளர் டி.எஸ்.கண்ணன் தேசியக் கொடியேற்றினார். அருண் பிரசாத் நினைவு அறக்கட்டளை எல்.அனிஷா மஞ்சனி, பள்ளி துணைச் செயலர் எஸ்.மனோன்மணி, முதல்வர் டி.தொல்காப்பியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் மானாசந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியை ஜெயக்கொடி முன்னிலையில், பள்ளிக் கல்விக் குழுத் தலைவரும், வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவருமான டேங்க் ஆர்.சண்முகம் தேசியக் கொடியேற்றினார். 
சிதம்பரம் அருகே பு.மடுவங்கரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், தலைமை ஆசிரியை ஈஸ்வரி முன்னிலையில், ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி  அலுவலர் செல்வராஜ் தேசியக் கொடியேற்றினார். சிதம்பரம் ஷெம்போர்டு ப்யூச்சரிஸ்டிக் பள்ளியில், முதல்வர் டி.லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளி நிறுவனர் ஏ.விசுவநாதன் முன்னிலை வகித்தார். பள்ளிச் செயலர் வி.அரிகிருஷ்ணன் வரவேற்றார். ரோட்டரி  சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் மணி தேசியக் கொடியேற்றினார்.
கட்சி அலுவலகங்களில்: இதேபோல, சிதம்பரம் தேரடி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் தேசியக் கொடியேற்றினார். 
இதேபோல, சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ. தேசியக் கொடியேற்றி, இனிப்புகளை வழங்கினார்.         
நெய்வேலி பகுதிகளில்...
வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளித் தாளாளர் ரா.செல்வராஜ் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விழுப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளி தாவரவியல் ஆசிரியர் வி.சேகர் கலந்து கொண்டு தேசியக் கொடியேற்றினார். பள்ளித் தாளாளர் எம்.வீரதாஸ், முதல்வர் வாலண்டினா லெஸ்லி, தலைமை ஆசிரியர் என்.மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பண்ருட்டி ரத்னா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் எம்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினார். பள்ளி முதல்வர் எம்.ரவி சிறப்புரையாற்றினார்.
வடலூர் ஏரீஸ் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரிகளில், நடைபெற்ற விழாவுக்கு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் கணேசன் தலைமை வகித்து, தேசியக் கொடியேற்றினார். கலைக் கல்லூரி முதல்வர் தியாகராஜன் சிறப்புரையாற்றினார்.
பண்ருட்டி, பணிக்கன்குப்பம் செயின்ட் பால் பப்ளிக் பள்ளியில் தாளாளர் ஏ.கிருபாகரன் தலைமையில், வேளாண்மைத் துறை அதிகாரி ஆர்.ஜோதிமணி தேசியக் கொடியேற்றினார். கல்வி ஆலோசகர் வி.சூரியசேகர், முதல்வர் ஆர்.விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அயன்குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் கோவிந்தன் தேசியக் கொடியேற்றினார். குறிஞ்சிப்பாடி உழவர் மன்றத் தலைவர் ஆர்.கே.ராமலிங்கம் கலந்து கொண்டனர். வடலூர் எஸ்.டி.ஈடன் பள்ளியில் முதல்வர் சுகிர்தா தாமஸ் தலைமையில், நிர்வாக இயக்குநர் தீபக் தாமஸ் தேசியக் கொடியேற்றினார்.
வடலூர் அன்னை தெரசா உண்டு உறைவிடப் பள்ளியில் மருத்துவர் சரவணன் தேசியக் கொடியேற்றினார். நெய்வேலி டிஎஸ்பி. லோகநாதன், வடலூர் காவல் ஆய்வாளர் கமலஹாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூகச் செயற்பாட்டாளர் த.சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரசு அலுவலகங்களில்: பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் எஸ்.செல்வபாலாஜி தேசியக் கொடியேற்றினார். மேலாளர் கிருஷ்ணராஜன், துப்புரவு அலுவலர் டி.சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) எஸ்.பாண்டியன் தேசியக் கொடியேற்றினார்.
பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவகத்தில் காவல் ஆய்வாளர் சண்முகம் தேசியக் கொடியேற்றினார்.
சிறுவர்கள் நிதியளிப்பு: பண்ருட்டி தீயணைப்பு நிலைய பணியாளர்கள் வளாகத்தில் உள்ள சிறுவர்கள் தாங்கள் சேமித்து வைத்திருந்த 665 ரூபாயை திருவதிகையில் உள்ள அம்மா முதியோர் இல்லத்துக்கு வழங்கினர்.
73 அடி நீள தேசியக் கொடி: சீஷா அமைப்பு சார்பில், அண்ணாகிராமத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு அண்ணாகிராமம் வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி தலைமை வகித்து, 73 அடி நீள தேசியக் கொடி ஊர்வலத்தைத் தொடக்கி வைத்தார். சீஷா மேலாளர் சார்லஸ் வரவேற்றார். 
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை லட்சுமி முன்னிலை வகித்தார். ஆசிரியை ஆர்த்தி நன்றி கூறினார்.
பண்ருட்டி ரோட்டரி சங்க வளாகத்தில் அதன் தலைவர் வீ.வீரப்பன் தேசியக் கொடியேற்றினார். ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், திருநாவலூர் அடுத்துள்ள சிறுலாப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான காலணிகள் வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியை சசிகலா நன்றி கூறினார்.                                   


 

ADVERTISEMENT
ADVERTISEMENT