கடலூர்

அரசுப் பேருந்து நடத்துநர் தற்கொலை முயற்சி

16th Aug 2019 09:32 AM

ADVERTISEMENT

விருத்தாசலத்தில் அரசுப் பேருந்து நடத்துநர் வியாழக்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் சதீஷ் (30). அரசுப் போக்குவரத்துக் கழக விருத்தாசலம் பணிமனை 1-இல் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 12 ஆண்டுகளாக நடத்துநராகப் பணியாற்றி வருகிறாராம். இந்த நிலையில், தன்னைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி, முதல்வர் தனிப் பிரிவுக்கு மனு அனுப்பியிருந்தாராம். இதைத் தெரிந்து கொண்ட போக்குவரத்துக் கழக நிர்வாகிகள் சதீஷை அழைத்து, எங்களது உதவியில்லாமல் பணி நிரந்தரம் செய்ய முடியாது என அலட்சியப்படுத்தியதாகவும், பணியிடத்தில் நெருக்கடி கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 
இதனால், மனமுடைந்த சதீஷ், தன்னைக் கருணைக் கொலை செய்ய வலியுறுத்தி, சுவரொட்டிகளை ஒட்டினாராம். இந்த நிலையில், வியாழக்கிழமை பணிமனை எதிரே உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டாராம். அப்போது, அருகில் இருந்தவர்கள் அவரது செயலைத் தடுத்து அறிவுரை வழங்கி, அனுப்பி வைத்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT