கடலூர்

பழங்குடி ஆதிவாசி  மக்களுக்கு சாதிச் சான்றிதழ் விநியோகம்

11th Aug 2019 01:56 AM

ADVERTISEMENT


சிதம்பரத்தில் வருவாய்த் துறை சார்பில், பழங்குடி ஆதிவாசி மக்களுக்கான நல்லுறவு கூட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில், சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 
நிகழ்ச்சிக்கு சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ் தலைமை வகித்தார். ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை தனி வட்டாட்சியர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். 
நிகழ்ச்சியில் சிதம்பரம் அருகே கிள்ளை (தெற்கு) பகுதியில் வசிக்கும்  பழங்குடி ஆதிவாசி மக்கள் சுமார் 500-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 
சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் உதவி ஆட்சியர் விசுமகாஜன் கலந்துகொண்டு பழங்குடி ஆதிவாசி மக்கள் 163 பேருக்கு சாதிச் சான்றிதழ்களையும், 88 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 18 பேருக்கு நலவாரிய அட்டைகளையும் வழங்கினார். 
 பின்னர் அவர் பேசுகையில், பழங்குடி ஆதிவாசி மக்கள் வருவாய்த் துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு அரசின் நல உதவிகளை கேட்டுப் பெறலாம். இந்தச் சமூக மாணவ, மாணவிகள் நன்றாக படித்து வாழ்வில் உயர வேண்டும் என்றார் அவர். 
 நிகழ்ச்சியில் சர்ப்பம் இருளர் சங்க மாவட்டச் செயலர் பாலகிருஷ்ணன், காட்டு நாயக்கர் சங்கம் செல்வகுமார் மற்றும் தொண்டு நிறுவனத்தினர், வருவாய் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆதிவாசி கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் குமரன் நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT