கடலூர்

டெங்கு பாதிப்பு பகுதிகளில்மருத்துவக் குழு முகாம்

11th Aug 2019 01:57 AM

ADVERTISEMENT

கடலூர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டுள்ளனர். 
 கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தொடர் காய்ச்சலுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த 9 பேரது ரத்த மாதிரிகள் அண்மையில் பரிசோதிக்கப்பட்டன. இதில், நெல்லிக்குப்பம் மேல்பாதி பகுதியைச் சேர்ந்த ல.பன்னீர்செல்வம் (42), பாரதியார் வீதியைச் சேர்ந்த சி.ஷ்யாம்சுந்தர் (20), கரைமேடு பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் மகள் பவஸ்ரீ (4) ஆகியோருக்கு டெங்கு பாதிப்புக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் டெங்கு சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
 இதுகுறித்து, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் எஸ்.கீதா கூறியதாவது: டெங்கு பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்தவர்களில் பன்னீர்செல்வம், ஷ்யாம்சுந்தர் ஆகியோர் சிகிச்சைக்குப் பிறகு சனிக்கிழமை வீடு திரும்பினர். ஷ்யாம்சுந்தர் சென்னையில் வேலைபார்த்து வந்த நிலையில் அவருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பன்னீர்செல்வம் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு அவருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 எனினும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் குடியிருப்புப் பகுதிகளுக்கு சுகாதாரப் பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பினர் நேரில் சென்று கொசு ஒழிப்பு பணிகளில் சனிக்கிழமை ஈடுபட்டனர். தொடர்ந்து, அங்கு ஒரு வாரம் முகாம் நடத்தப்பட்டு தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT