கடலூர்

ஐஎஸ்ஓ தரச் சான்று பெற சிறப்பு மானியம்

11th Aug 2019 01:58 AM

ADVERTISEMENT


தொழில் நிறுவனங்கள் சர்வதேச தரச் சான்றிதழ் பெறுவதற்கு சிறப்பு மானியத் திட்டம் வழங்கப்படுவதாக மாவட்ட தொழில் மையம் தெரிவித்தது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சர்வதேச போட்டித் தன்மையை மேம்படுத்தவும், உலகளாவிய சந்தையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு ஏதுவாகவும் இந்த நிறுவனங்கள் ஐஎஸ்ஓ 9000, ஐஎஸ்ஓ14001,  ஏஅஇஇட, ஆஐந, ழஉஈ  உள்ளிட்ட சர்வதேச தரச் சான்றிதழ்கள் பெற்றிட ஏற்படும் செலவின தொகையில் ஒவ்வொரு சான்றிதழுக்கும் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை ஈடு செய்திட  'ண-  இங்ழ்ற்' என்ற பெயரில் தமிழக அரசு  திட்டத்தை செயல்படுத்துகிறது.
மேற்கண்ட சர்வதேச தரச் சான்றிதழ் மற்றும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் தரச்சான்றிதழ்களை பெற குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையனவாகும். மேலும், இந்த நிறுவனங்கள் சான்றிழ் அமைப்புகளுக்கான தேசிய அங்கீகார வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் மூலமாக சர்வதேச தரச்சான்று பெற்றிருத்தல் அவசியமாகும்.
 தர நிர்ணய சான்றிதழ் பெற்ற நாளிலிருந்து ஒரு ஆண்டுக்குள் கடலூர் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் இந்த மானியத்தைப் பெற விண்ணப்பிக்க வேண்டும். 
ஒன்றுக்கு மேற்பட்ட கிளைகள் உள்ள தொழில் நிறுவனங்கள் ஒவ்வொரு கிளைக்கும் தனித் தனியாக விண்ணப்பித்து மானியம் பெறலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை 04142-290116 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.
எனவே, இந்தத் திட்டத்தை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT