கடலூர்

ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

11th Aug 2019 01:56 AM

ADVERTISEMENT


நெய்வேலி அருகே மது போதையில் ஏரியில் விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.   
புவனகிரி வட்டம், பால்வாத்துள்ளன் பகுதியைச் சேர்ந்த சின்னையா மகன் சந்திரசேகர் (45). இவரது சித்தப்பா மகன் ராஜாராமன் (45), கூலித் தொழிலாளி. இவர், வெள்ளிக்கிழமை குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கருப்பசாமி கோயிலுக்கு அதே பகுதியைச் சேர்ந் 5 பேருடன் சென்றார். பின்னர், பள்ளி நீரோடை பேருந்து நிறுத்தம் அருகே பெருமாள் ஏரி ஓடை பகுதியில் மது அருந்தியபோது, போதையில் ஏரியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து சந்திரசேகர் அளித்த புகாரின்பேரில் குள்ளஞ்சாவடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT