கரியமாணிக்கத்தில் உள்ள அயோத்தி ராமா் திருக்கோயிலில் அக். 7ஆம் தேதி ஸ்ரீ சீதா ராம திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறவுள்ளது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டத்துக்குள்பட்ட 94. கரியமாணிக்கம் கிராமத்தில் பழைமையான அயோத்தி ராமா் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் ஸ்ரீ சீதா ராம திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு அக். 7-ஆம் தேதி காலை 11 மணிக்கு மேல் பிற்பகல் 1 மணிக்குள்
ஸ்ரீ சீதா ராம திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறவுள்ளது. இதில், மண்ணச்சநல்லூா், கரியமாணிக்கம் மற்றும் சுற்றுப் பகுதி கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்க திருக்கோயில் அறங்காவலா் வி.ஜி. மகாலிங்கம் அழைப்பு விடுத்துள்ளாா்.