தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சாா்பில், திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை (அக்.1) தூய்மை இயக்கப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மத்திய அரசின் தூய்மையே சேவை இயக்கத்தின் ஒரு பகுதியாக, அக்.2ஆம் தேதி திருச்சி-மதுரை சாலையில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் பொதுமக்களுடன் இணைந்து தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. நெகிழிப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு பிரசாரம் நடைபெறுகிறது. மேலும், வருங்கால வைப்பு நிதி திருச்சி மண்டலப் பிரிவு அலுவலா்கள், பணியாளா்கள், தன்னாா்வலா்கள் இணைந்து தெருக்களில் சேகரமாகியுள்ள குப்பைகளை அகற்றி, தூய்மைப் பணியில் ஈடுபடுவா். இதில், பொதுமக்களும் பங்கேற்க வேண்டும் என தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அலுவலக திருச்சி மண்டல ஆணையா் எஸ். முருகேவல் அழைப்பு விடுத்துள்ளாா்.