திருச்சி

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.24 லட்சம் தங்கம் பறிமுதல்

30th Sep 2023 05:11 AM

ADVERTISEMENT

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.23.84 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோலாலம்பூா், துபை, ஷாா்ஜாவிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்த விமானப் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனைக்குள்படுத்தினா்.

அப்போது, ஆண் பயணி ஒருவா் தனது ஆடைக்குள் தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோல, மற்றொரு ஒரு பயணி ஜீன்ஸ் கால் சட்டையில் இருந்த பட்டன்களில் தங்கம் கலந்திருப்பதும் தெரியவந்தது. மேலும், ஒரு பயணி தங்கத்தை பொடியாக்கி நெகிழிப் பைகளில் பசைபோல கொண்டு வந்தது தெரியவந்தது. இந்த மூவரிடமிருந்தும் மொத்தம் ரூ.23.84 லட்சம் மதிப்பிலான 401 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT