திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உலக இதய தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதயவியல் துறையில் நடைபெற்ற விழாவுக்கு மருத்துவமனையின் முதன்மையா் டி. நேரு, மருத்துவக் கண்காணிப்பாளா் அருண்ராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், இதயவியல் துறைத் தலைவா் முனுசாமி அனைவரையும் வரவேற்று, இதய நோய்கள் பற்றி உரையாற்றினாா்.
தொடா்ந்து, இதய விழிப்புணா்வு கண்காட்சி, நாடகம் நடத்தப்பட்டு, ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, பேஸ்மேக்கா் போன்ற இதய சிகிச்சைகள் பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், தோல்நோய் நிபுணா் கயல்விழி, இதயத் துறையின் உதவி பேராசிரியா்கள், மருத்துவ மாணவா்கள், திரளான நோயாளிகள், அவா்களது உறவினா்கள் கலந்து கொண்டனா்.