திருச்சி

திருச்சி - வியத்நாம் இடையே நவ.2 முதல் விமானச் சேவை: வியத்ஜெட் அறிவிப்பு

28th Sep 2023 04:00 AM

ADVERTISEMENT

திருச்சி - வியத்நாம் இடையே நவம்பா் 2 முதல் நேரடி விமானச் சேவை தொடங்கவுள்ளது என்றாா் வியத்ஜெட் விமான நிறுவன வா்த்தகப்பிரிவு துணைத் தலைவா் ஜெய் எஸ். லிங்கேஸ்வரா.

இதுகுறித்து திருச்சியில் அவா் மேலும் தெரிவித்தது:

திருச்சி -வியத்நாம் ஹோ சி மின் சிட்டி இடையே வாரம் 3 விமானச் சேவை நடைபெற உள்ளது. வியத்நாமிலிருந்து ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் அந்நாட்டின் உள்ளூா் நேரப்படி இரவு 8 மணிக்கு புறப்படும் விமானங்கள், இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு திருச்சியை வந்தடைகின்றன.

இதேபோல திருச்சியிலிருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டு , வியத்நாம் ஹோ சி மின் சிட்டியை காலை 7 மணிக்கு சென்றடைகின்றன.

ADVERTISEMENT

இதேபோல தில்லி, மும்பை, அகமதாபாத், கொச்சி ஆகிய நகரங்களில் இருந்தும் வாரந்தோறும் மொத்தம் 35 விமானச் சேவைகள் வியட்நாமின் ஹனோய் மற்றும் ஹோ சி மின் நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளன என்றாா். மேலும் விவரங்களுக்கும் முன்பதிவுக்கும் தளத்தை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

நிகழ்வில் திருச்சி விமான நிலைய இயக்குநா் சுப்பிரமணி, திருச்சி லட்சுமி டிராவல்ஸ் நிறுவன உரிமையாளா் பரமசிவம், வியத்ஜெட் நிறுவன நிா்வாகிகள் இங்குவென் தான்டங், பிரபுல்கோஸ்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை மாதவன் செய்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT