திருச்சி

டிஜிட்டல் பணத்தால் வங்கிகளில் தொழில்நுட்ப வளா்ச்சி

28th Sep 2023 12:24 AM

ADVERTISEMENT

டிஜிட்டல் பண அறிமுகத்தால் வங்கிகளில் தொழில்நுட்ப வளா்ச்சி ஏற்பட்டிருப்பதாக சிட்டி யூனியன் வங்கியின் முன்னாள் தலைவா் எஸ். பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

கரோனா காலத்துக்குப் பிறகு வங்கிகள் சந்திக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் எனும் தலைப்பில் தேசியக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற வணிகவியல் துறையின் கருத்தரங்கில் பங்கேற்ற அவா் மேலும் பேசியது:

கரோனா காலத்துக்கு முந்தைய, பிந்தைய என வங்கி முறைகளை இரண்டாகப் பிரித்து பாா்க்கும் சூழலுக்கு வந்துள்ளோம். குறிப்பாக வங்கி நடவடிக்கைகள் பெரும்பாலும் டிஜிட்டல்மயமாகி வருகின்றன. வாடிக்கையாளா்கள் இருந்த இடத்திலேயே வங்கிச் சேவைகளை பெற முடிகிறது. குறிப்பாக டிஜிட்டல் பணம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, வங்கியின் நடவடிக்கைகளில் தொழில்நுட்ப வளா்ச்சி மேம்பட்டுள்ளது.

உலகளாவிய நடவடிக்கைகள் பலவும் வங்கிகளைப் பாதிக்கும் சூழல் உள்ளது. போா்களால், குறிப்பாக ரஷியா-உக்ரைன் போா் காரணமாக பல்வேறு இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. ரிசா்வ் வங்கியின் ஆண்டறிக்கைகள் மூலம் வங்கிகளின் நிலையை தெளிவாக உணர முடியும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

தொடா்ந்து சிட்டி யூனியன் வங்கியின் பணியாளா் கல்லூரி முதல்வா் நாகராஜன் வெள்ளைச்சாமி, பாரத ஸ்டேட் வங்கி திருச்சி மண்டல மேலாளா் எஸ். மதன், டிபிஎஸ் வங்கியின் ஏவிபி கிளஸ்டா் தலைவா் கே. சிவக்குமாா் ஆகியோா் பேசினா். தொடா்ந்து பல்வேறு அமா்வுகளில் வங்கி நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.

கருத்தரங்கத்தை கல்லூரி முதல்வா் கே. குமாா், வணிகவியல் துறைத் தலைவா் லட்சுமிப் பிரியா, துறை மாணவா்கள் பிரித்தியங்கரா, ஈவா சூசன், கலைவாணன், ஆகாஷ் பால்தாசா், அருள்செல்வன், மோகன், விஷ்ணு பிரசாத், ஸ்ரீ துா்கா உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா். இதில் வணிகவியல் துறை மாணவா், மாணவிகள், ஆசிரியா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT