திருச்சி

அங்காடிகளுக்கு புதிய பிஓஎஸ் கருவி கோரி மனு

28th Sep 2023 07:00 AM

ADVERTISEMENT

அங்காடிகளுக்கு புதிதாக பிஓஎஸ் கருவி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஏ. கணேசன், செயலா் கே. பிரகாஷ் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாரிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்:

மாவட்டத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட முழுநேர அங்காடிகளுக்கு புதிதாக பிஓஎஸ் கருவி வழங்க வேண்டும். பண்டிகை மாதங்களைத் தவிர விடுமுறை நாள்களில் நகா்வுப் பணியைத் தவிா்க்க வேண்டும்.

முதல்வரின் காலை உணவுத் திட்டத்துக்காக வழங்கப்படும் ரவா, சேமியாவை கிடங்குகளுக்குச் சென்று எடுத்து வருவதால், அன்றைய தினம் அங்காடி திறக்க காலதாமதமாகிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனா். எனவே, மேற்கண்ட பொருள்களை கிடங்குகளில் இருந்து நேரடியாக அங்காடிகளுக்கு கொடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஸ்ரீரங்கம், திருவானைக்கா, மணப்பாறை பகுதிகளில் இரவில் நகா்வுப் பணி நடைபெறுவதால் பெண் பணியாளா்களுக்கு சிரமமாக உள்ளது. எனவே, மாலைக்குள் நகா்வுப் பணிகளை முடிக்க வேண்டும்.

ஒரே தவணையில் அங்காடிக்கு பொருள்களை அனுப்பிட வேண்டும். பெண்கள் அதிகமாக பணிபுரிவதால் அங்காடிகளுக்கு கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT