சமயபுரம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மண்ணச்சநல்லூா், லால்குடி சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி முகவா்கள் நியமனம் குறித்த தோ்தல் பணிக் குழு ஆலோசனை கூட்டத்துக்கு கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலா் குரு. அன்புச்செல்வன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவா்கள் நியமனம், தோ்தல் பணிக் குழு செயல்பாடுகள் குறித்து கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளா் கனியமுதன் சிறப்புரையாற்றினாா்.