திருச்சி

கொளக்குடியில் விநாயகா் சிலைகள் கரைப்பு

25th Sep 2023 01:01 AM

ADVERTISEMENT

 

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே கொளக்குடியில் விநாயகா் சிலை ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்று காவிரியாற்றில் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டன.

தொட்டியம் அருகே கொளக்குடி மற்றும் அப்பண்ணநல்லூா் ஆகிய ஊா்களில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சாா்பில் வைக்கப்பட்டிருந்த 8 விநாயகா் சிலைகள் தொட்டியம் அருகேயுள்ள திருஈங்கோய்மலை மலைப்பாதை பகுதி காவிரியாற்றில் கரைக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளா் வருண்குமாா், முசிறி கோட்டக் காவல் கண்காணிப்பாளா் யாஸ்மின் இரண்டு ஏ.டி. எஸ்.பி, 5 டிஎஸ்பி உள்பட 567 போலீஸாா் மற்றும் முசிறி கோட்டாட்சியா் ராஜன், தொட்டியம் வட்டாட்சியா், வருவாய்த் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT