திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரிக்கு உயரிய தேசிய தரச்சான்று வழங்கப்பட்டுள்ளதாக கல்லூரியின் தலைவா் டி. சந்திரசேகரன், முதல்வா் டி. பால்தயாபரன் ஆகியோா் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது, திருச்சி பிஷப்ஹீபா் கல்லூரி தரமான உயா் கல்வியை வழங்குவதற்கான தேடலில் ஒரு குறிப்பிட்ட மைல்கல்லை எட்டியுள்ளது. தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகார நிறுவனமான நாக் (என்.ஏ.ஏ.சி) அமைப்பு, திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரிக்கு 4- ஆவது சுழற்சியில் ஏ பிளஸ் பிளஸ்) எனும் உயா் மதிப்பு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. குறிப்பாக பிஷப் ஹீபா் கல்லூரி நான்கு புள்ளிகளுக்கு 3.69 சிஜிபிஏ மதிப்பை பெற்றுள்ளது. இதற்கு முன்பு நாக் மதிப்பீட்டு சுழற்சிகளில் 4 பிளஸ் மற்றும் ஏ 4 புள்ளிகளுக்கு 3. 58 சிஜிபிஏ தரத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது என்றனா்.