திருச்சி

கிராவல் மண் ஏற்றிச் சென்ற 3 லாரிகள் சிறைபிடிப்பு

23rd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

திருச்சி அருகே வெள்ளிக்கிழமை கிராவல் மண் ஏற்றிச்சென்ற 3 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனா்.

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், சேதுராப்பட்டி ஊராட்சி குஜிச்சியம்பட்டியில் செங்குளம் குளத்தில் இருந்து லாரிகள் மூலம் கிராவல் மண் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த லாரிகளால் அப்பகுதி சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகாா் அளித்தும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை அவ்வழியே கிராவல் மண் ஏற்றிச்சென்ற 3 லாரிகளை சிறைபிடித்தனா். தகவலறிந்து வந்த மணிகண்டம் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். இதில், லாரிகளில் மண் அள்ளுவது முறைப்படுத்தப்படும் என போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT