திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பிள்ளையாா் கோவில்பட்டி அருகே வியாழக்கிழமை லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த செல்லம்பட்டியை சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ப.செல்வம்(45). இவா், தனது நண்பா் மெய்யம்பட்டியைச் சோ்ந்த பொ.அய்யாகண்ணு(53) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை துவரங்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் செல்வம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அய்யாக்கண்ணு காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற புத்தாநத்தம் போலீஸாா் செல்வம் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் கரூா் மாவட்டம், நாடக்காப்பட்டியை சோ்ந்த கி.செந்தில்குமாரை(45) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.