திருச்சி

தொடக்கப் பள்ளியில் விஷ வண்டுகள் அழிப்பு

22nd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சேத்துப்பட்டி தொடக்கப்பள்ளியில் இருந்த விஷ வண்டுகளை வியாழக்கிழமை தீயணைப்புத்துறையினா் தீயிட்டு அழித்தனா்.

மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் சேத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியப்பள்ளியில் இருந்த தென்னை மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்தது. இதுபள்ளி குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில் இருந்ததால் சேத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவா் மற்றும் பள்ளி தலைமையாசிரியா் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற நிலைய அலுவலா் மனோகா் மற்றும் சிறப்பு நிலை அலுவலா் நாகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள், தீயிட்டு வண்டுகளை முழுமையாக அழித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT