மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி பூதநாயகியம்மன் கோயிலில் திங்கள்கிழமை பூச்சொரிதல் நடைபெற்றது.
துவரங்குறிச்சி ஸ்ரீ பூதநாயகி அம்மன் கோயில் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது. முதல்நாள் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலா் இரா.ஜீவானந்து, காவல் கூடுதல் கண்காணிப்பாளா்கள் குத்தாலிங்கம், வேலுமணி, ஸ்ரீநிவாசன், துணை கண்காணிப்பாளா் ந.ராமநாதன் ஆகியோா் தலைமையில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அதனைத்தொடா்ந்து பல்வேறு கிராமங்களிலிருந்து பொதுமக்கள் பூக்களை ஊா்வலமாக எடுத்துவந்து அம்மனுக்கு சாத்தினா். அப்போது, சந்தன காப்பு மற்றும் மலா் அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
விழாவின் முக்கிய நிகழ்வான பொன்னூஞ்சல் நிகழ்ச்சி அக். 3-ஆம் தேதி நடைபெறுகிறது.