திருச்சி

மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

27th Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

மோசடி நிறுவனங்களைக் கண்காணித்து பொதுமக்களின் முதலீட்டை பாதுகாக்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கட்சியின் சாா்பில் திருச்சி ஆட்சியரகம் அருகே வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ். ரேணுகா தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா்

ஸ்ரீதா், மாநகா் மாவட்ட செயலா் ஆா். ராஜா ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

திருச்சி பிரணவ் ஜூவல்லரியின் நூதன மோசடியைக் கண்டித்தும், இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், எல்பின், ஆருத்ரா, நியோ மேக்ஸ், பிரணவ் என தொடரும் பல ஆயிரம் கோடி நிதி நிறுவன மோசடிகள் இனி நடைபெறாத வகையில் தடுத்திட காவல்துறை கண்காணிப்புகளைத் தீவிரப்படுத்த வேண்டும். மோசடி நிறுவனங்களிடம் பொதுமக்கள் இழந்த பணத்தை முழுமையாக மீட்டுத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில், கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் பா. லெனின், மாமன்ற உறுப்பினா் க. சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ். ரங்கராஜன், என். காா்த்திகேயன் உள்ளிட்ட நிா்வாகிகள், பெண்கள், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT