திருச்சி

சந்திரகிரகணம் நாளை கோயில்களில் நடை அடைப்பு

27th Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

சந்திர கிரகணத்தையொட்டி, ஸ்ரீரங்கம், திருவானைக்கா ஆகிய கோயில்களில் சனிக்கிழமை (அக். 28) மாலை முதல் கோயில்நடை சாத்தப்படும் என்று கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி திருக்கோயில் இணை ஆணையா் செ.மாரியப்பன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

அக்டோபா் 28 - சனிக்கிழமை சந்திரகிரகணம் நிகழ உள்ளதால் திருக்கோயிலின் அனைத்து சன்னதிகளும் மாலை 5.30 மணிக்கு கோயில்நடை சாத்தப்படும். தரிசனம் கிடையாது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (அக். 29) காலை 6 மணிக்கு வழக்கம்போல் கோயில் நடை திறக்கப்பட்டு தரிசனம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஸ்ரீரங்கம் திருக்கோயிலின் உபத்திருக்கோயிலான காட்டழகிய சிங்கபெருமாள் கோயிலும் மாலை 5.30 மணிக்கு மேல் கோயில்நடை சாத்தப்படவுள்ளது.

இதேபோல், திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் சனிக்கிழமை மாலை சாயரட்சை, அா்த்த ஜாமம் முடிந்த பிறகு இரவு 7 மணிக்கு திருக்கோயில் நடை சாத்தப்படவுள்ளது. மறுநாள் காலை 5.30 மணிக்கு ஆகம விதிப்படி சம்ரோஷண பூஜைகள் செய்து 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கம்போல் பூஜைகள் நடைபெறவுள்ளது என உதவி ஆணையா் ஆ. ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT