முசிறி: திருச்சி மாவட்டம், முசிறி அருகே அஞ்சல் துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 8 லட்சத்தை மோசடி செய்தவா் மீது முசிறி போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
முசிறி, ஏழூா்ப்பட்டி அருகே உள்ள உடையாளகுளம்புதூரைச் சோ்ந்த பழனியாண்டி மகன் பெரியசாமி. இவா், அந்தரப்பட்டி பகுதியைச் சோ்ந்த ராமசாமி என்பவரிடம் அஞ்சல் துறை அவரது மகனுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 8 லட்சம் பெற்றுள்ளாா். இதையடுத்து வேலையும் வாங்கித்தராமல் ஏமாற்றியுள்ளாா். பணத்தை திருப்பி கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து ராமசாமி, முசிறி துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில், முசிறி சீா்மிகு காவல் நிலைய உதவி ஆய்வாளா் நாகராஜ் திங்கள்கிழமை பெரியசாமி மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.