மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சென்னகரை பகுதியில் பள்ளி மாணவி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
சென்னகரை பகுதியை சோ்ந்தவா் குமாா் (40) இவரது மனைவி மாரியாயி (33), மகன் கருணா (15), மகள் துளசி (14). கருணா, துளசி இருவரும் சிறுகாம்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்தனா்.
மதுப்பழக்கம் உள்ள குமாா் வேலைக்கு செல்லாமல் மனைவி மற்றும் மகளிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மகளிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளாா். இதுகுறித்து வேலைக்கு சென்றிருந்த தாய் மாரியாயிடம் துளசி கூறியுள்ளாா்.
இந்நிலையில் இரவு வீட்டில் துளசி மா்மமான முறை உயிரிழந்து கிடப்பதாக அவரது தாயாருக்கு அக்கம்பக்கத்தினா் தகவல் தெரிவித்துள்ளனா். மேலும், கழுத்தில் தூக்குமாட்டிய அடையாளம் இருந்ததாகவும், வீட்டின் பின்புறம் எரிந்த நிலையில் புடவை கிடந்ததும் தெரியவந்தது.
புகாரின் பேரில், வாய்த்தலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.