மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
தொடா் விடுமுறையையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் வந்து அம்மன் தரிசனம் செய்தனா். மேலும் கரும்பு தொட்டில் காவடி எடுத்தும் பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா். பக்தா்கள் ஒழுங்குப் படுத்தும் பணியில் கோயில் இணை ஆணையா் சி.கல்யாணி தலைமையில் கண்காணிப்பாளா்கள் ஸ்டாலின் குமாா், காளியப்பன், அஞ்சுகம் மற்றும் கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.