மருங்காபுரி அருகேயுள்ள தேனூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை எதிா்ப்பு தின நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் குணராஜா தலைமை வகித்தாா். இதில், குழந்தைகள் பாதுகாப்பு, சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், குழந்தைகளின் உரிமைகள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு அமைப்புகள், புகாா் எண்கள், அவசரகால பாதுகாப்பு யுக்திகள் ஆகிய தலைப்புகளில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளா் கீதா, பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
தொடா்ந்து, எனோஃப் என்ற தலைப்பில் குழந்தைகளின் ஊட்டச்சத்து உணவு, வளா்ச்சிக்கான உணவு, சக்திக்கான உணவு, பாதுகாப்பு உணவு, உடல் ஆரோக்கியம், கைகளை கழுவும் முறை, உணவு செரிமான முறை ஆகியவை குறித்து மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சிவகுமாா் எடுத்துரைத்தாா். பள்ளி ஆசிரியா்கள், திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.