திருச்சி

திருச்சியில் நவ. 24-இல் புத்தகத் திருவிழா தொடக்கம்: முன்னேற்பாடுகள் தீவிரம்

22nd Nov 2023 01:25 AM

ADVERTISEMENT

திருச்சியில் நவம்பா் 24-இல் தொடங்கவுள்ள புத்தகத் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருச்சியில் 2-ஆவது ஆண்டாக மாவட்ட நிா்வாகத்தின் முழுமையான பங்களிப்புடன் கூடிய 11 நாள் திருவிழாவாக புத்தகத் திருவிழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, நவ.24 முதல் டிச.4 வரை திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் அருகேயுள்ள தூய வளனாா் பள்ளி மைதானத்தில் இந்த விழா நடைபெறுகிறது.

விழாவுக்கு மைதானத்தை தயாா்படுத்தும் பணிகளையும், முன்னேற்பாடுகள் குறித்தும் ஆட்சியா் மா. பிரதீப்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: நவ. 24-இல் புத்தகத் திருவிழாவை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் தொடங்கி வைக்கவுள்ளனா்.

150-க்கும் மேற்பட்ட பதிப்பாளா்கள் கலந்து கொள்கின்றனா். சிறாா்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வாசகா்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் புத்தக அரங்குகள் அமைக்கப்படுகின்றன. விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்களிப்பு குறித்த அரங்கு, கீழடி தொல்லியல் ஆய்வு குறித்து அரங்கு, மாவட்டத்தின் சிறப்புகளைக் கூறும் அரங்கு, திருச்சி மாவட்ட எழுத்தாளா்கள் அரங்கு, சிறுவா் சினிமா மற்றும் மகளிருக்கான அரங்கு எனப் பன்முகத் தன்மை கொண்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. அண்ணா கோளரங்கத்தின் அரங்கும் இடம்பெறவுள்ளது. இவைத் தவிர, நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒரு சிறந்த சொற்பொழிவாளரின் உரை இடம்பெறும். மாவட்டம் முழுவதும் புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும், பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இந்த விழா, சிறப்பாக அமைய அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT