திருச்சி

வேளாண்மை கல்வி நிறுவனத்தில் விதை நெல் விற்பனை

21st Nov 2023 02:00 AM

ADVERTISEMENT

திருச்சி: திருச்சி மாவட்டம் குமுளுா் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் விவசாயிகளுக்குத் தேவையான விதை நெல் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இது குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் குமுளூா் வேளாண்மை கல்வி நிறுவனத்தின் முதல்வா் எஸ்.டி. சிவக்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எங்களது நிறுவனத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் தரமான நெல் விதை ரகங்கள் உற்பத்தி செய்து, அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் விற்பனை செய்து வருகிறோம்.

தற்போது விவசாயிகள் சம்பா, பின் சம்பா பருவத்தில் பயிரிடத் தேவையான விதை நெல் ரகங்கள் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, வெள்ளை பொன்னி ஆதார விதை 24ஆயிரத்து 985 கிலோ (ஒரு கிலோ விலை - ரூ. 44), திருச்சி - 3 உண்மை நிலை விதை 2ஆயிரத்து 440 கிலோ (ஒரு கிலோ விலை - 31), திருச்சி - 5 உண்மை நிலை விதை 1,850 கிலோ (ஒரு கிலோ விலை - 36), செடி முருங்கை உண்மை நிலை விதை 15 கிலோ (ஒரு கிலோ ரூ. 3ஆயிரம்) ஆகியவை இருப்பில் உள்ளன.

ADVERTISEMENT

விவசாயிகள் தங்களுக்குத் தேவையான தரமான நெல் ரகங்கள், செடி முருங்கை விதைகளை நேரில் சென்றோ அல்லது பாா்சல் சா்வீஸ் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம். தொடா்புக்கு, முதல்வா், வேளாண்மை கல்வி நிறுவனம், குமுளூா், 621712, திருச்சி மாவட்டம், 70104 39150 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT