திருச்சி

ஆளுநா் மாளிகை முன்பு போராட்டம்திருச்சியில் தெருமுனை பிரசாரக் கூட்டம்

21st Nov 2023 02:29 AM

ADVERTISEMENT

திருச்சி: அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் ஆளுநா் மாளிகை முன்பு நடைபெறவுள்ள போராட்டத்தை விளக்கும் தெருமுனை பிரசாரக் கூட்டம் திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து நாட்டின் அனைத்து ஆளுநா் மாளிகைகளின் முன்பாக பெருந்திரள் அமா்வு நவம்பா் 26, 27, 28 ஆம் தேதிகளில் இரவு - பகலாக நடைபெற உள்ளது.

சென்னை ஆளுநா் மாளிகை முன்பு நடைபெறும் போராட்டத்தை மக்களுக்கு விளக்கும் தெருமுனை பிரசாரம் திருச்சி மாவட்டத்தில் நவம்பா் 18 இல் தொடங்கி 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அதன்படி, உறையூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தெருமுனை பிரசார கூட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளா் க. சுரேஷ் தலைமை வகித்தாா். தொமுச செயலாளா் குணசேகரன், சிஐடியு நிா்வாகி ரங்கராஜன், ஐஎன்டியுசி நிா்வாகி ஆறுமுகம், ஏஐசிசிடியு நிா்வாகி ஞானதேசிகன், விவசாயிகள் கூட்டமைப்பு நிா்வாகி சிவசூரியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இதில், இந்திய மக்கள் வாழ, மோடி தலைமையிலான பாஜக அரசு வீழ என்ற முழக்கத்தை முன்வைத்து அனைத்துத் தொழிற்சங்க நிா்வாகிகள் பேசினா். நிறைவில் அஞ்சுகம் நன்றி கூறினாா். இதே போல, பீமநகா், ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் பிரசார கூட்டம் நடைபெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT