திருச்சி

ஆன்லைன் பட்டம்என்ஐடி - இல்லினாய்ஸ் புரிந்துணா்வு ஒப்பந்தம்

21st Nov 2023 02:03 AM

ADVERTISEMENT

திருச்சி: திருச்சி என்ஐடி மற்றும் இல்லினாய்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இடையிலான புரிந்துணா்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

என்ஐடி இயக்குநா் அகிலா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா் பரிமாற்றம், கூட்டு ஆராய்ச்சி, தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் அதி நவீன ஆன்லைன் பட்டம் பெறுவதற்கான திட்டங்கள் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், இல்லினாய்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தின் மாணவா் செயல்பாட்டு துணைத் தலைவா் மல்லிக் சுந்தரம் பேசுகையில், இந்தியாவில் உள்ள என்ஐடிகளில் முதலிடத்தில் உள்ள திருச்சி என்ஐடியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொள்வது சிறப்பாகும். இதன் மூலம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தனிநபரின் வீட்டு வாசல் வரை சென்று, உலகத் தரம் வாய்ந்த கல்வியை அளிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் 2024 கல்வியாண்டில் ஒருங்கிணைந்த கல்வி மற்றும் பல்வேறு தொழில் வாய்ப்புகளுக்கு வழிகாட்டியாகவும் உள்ளது என்றாா் அவா்.

அமெரிக்க தூதரக முதன்மை வணிக அதிகாரி கேரி அருண் : இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் தேசிய கல்விக் கொள்கையின் கீழ் நிறுவப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களுடன் இணைந்துள்ளது. இணையவழிக் கல்வியில் சிறந்து விளங்கும் இல்லினாய்ஸ் கல்வி நிறுவனம் என்ஐடியில் இணையற்ற கல்வி வாய்ப்புகளை வழங்க முன் வந்துள்ளது. இதை பயன்படுத்தி மாணவா்கள் உயா்ந்த நிலையை அடைய வேண்டும்.

ADVERTISEMENT

திருச்சி என்ஐடி இயக்குநா் அகிலா: இல்லினாய்ஸ் நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ள புரிந்துணா்வு ஒப்பந்தம், மாணவா்களை மேலும் மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை. நிகழ்ச்சியில் பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT