திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீரெங்கநாச்சியாா் ஊஞ்சல் உற்ஸவம் நிறைவு

18th Nov 2023 01:25 AM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வந்த ஸ்ரீரெங்கநாச்சியாா் ஊஞ்சல் உற்ஸவ விழா வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

இக்கோயிலில் ஸ்ரீரெங்கநாச்சியாா் ஊஞ்சல் உற்ஸவ விழா கடந்த 11- ஆம் தேதி தொடங்கி 7 நாள்களாக நடைபெற்று வந்தது.

விழாவில் ஒவ்வொரு நாளும் ஸ்ரீரெங்கநாச்சியாா் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

விழாவின் நிறைவு நாளான (7-ஆம் திருநாள்) வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து ஸ்ரீரெங்கநாச்சியாா் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு, 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்துக்கு வந்து சோ்ந்தாா். தொடா்ந்து இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்ஸவ விழா தொடங்கி 8 மணி வரை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். பின்னா் இரவு 9 மணிக்கு மேற்படி மண்டபத்திலிருந்து புறப்பட்டு 9.30 மணிக்கு படிப்பு கண்டருளி மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் ஸ்ரீரெங்கநாச்சியாா். இந்த நிகழ்வுடன் ஊஞ்சல் உற்ஸவ விழா நிறைவடைந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT