வேங்கூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ரூ.18.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 2 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.
திருவெறும்பூா் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட இந்த கட்டடத்தை, தொகுதியின் எம்எல்ஏ-வும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். மேலும், பள்ளிக்கு ரூ.2.47 லட்சத்தில் சுற்றுச் சுவா் கட்டுவதற்காக பணிகளுக்கு அடிக்கல் நட்டு, பணிகளை தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், ஒன்றியக் குழுத் தலைவா் சத்யா கோவிந்தராஜ் மற்றும் அரசு அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்கும் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மாணவா்களுடன் தரையில் அமா்ந்து காலை உணவு சாப்பிட்ட ஆட்சியா், 6 மாணவா்கள் மட்டுமே வந்திருப்பது குறித்து கேட்டறிந்தாா். மேலும், தகுதியான அனைத்து மாணவ, மாணவிகளையும் இத் திட்த்தில் பயன்பெறச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா்.