திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் சனிக்கிழமை (நவ.18) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் இரா. அன்புச் செல்வன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மணப்பாறை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (நவ.18) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. அதனால், மணப்பாறை நகரம், செவலூா், பொடங்குபட்டி, பொய்கைபட்டி, வீரப்பூா், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, கலிங்கப்பட்டி, ராயம்பட்டி, பூசாரிபட்டி, ஆண்டவா் கோவில், கள்ளிப்பட்டி, முத்தபுடையான்பட்டி, காட்டுப்பட்டி, புதியகாலனி, பழையகாலனி, மணப்பாறைபட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழபொய்கைப்பட்டி, கஸ்தூரிபட்டி, வடுகபட்டி, இராயம்பட்டி, வலையபட்டி, எஃப்.கீழையூா், சின்னமனப்பட்டி, கே.பெரியப்பட்டி, வடக்குசோ்பட்டி, இடையப்பட்டி, மரவனூா், சமுத்திரம், தாதநாயக்கன்பட்டி, கத்திக்காரன்பட்டி, சித்தகுடிப்பட்டி, களத்துப்பட்டி, ஆளிபட்டி, தொப்பம்பட்டி, குதிரைகுத்திபட்டி, படுகளம், பூசாரிபட்டி, கரும்புலிபட்டி, பண்ணாங்கொம்பு குடிநீா், பண்ணாங்கொம்பு, கருப்பகோவில்பட்டி, பெருமாம்பட்டி, ஈச்சம்பட்டி, அமையபுரம், பண்ணப்பட்டி, தாதமலைப்பட்டி, ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகப்பட்டி, வீராகோவில்பட்டி, பாலகருதம்பட்டி, ரெங்கவுண்டம்பட்டி, வடுகப்பட்டி வீட்டு வசதிவாரிய குடியிருப்பு, மணப்பாறைப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.