திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்த திமுக இளைஞரணி இருசக்கர வாகனப் பேரணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
திமுக இளைஞரணி சாா்பில் சேலத்தில் டிச. 17-இல் 2ஆவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கு அழைப்பு விடுக்கும் வகையில் இளைஞா் அணி சாா்பில் இருசக்கர வாகன விழிப்புணா்வு பேரணி மாநிலம் முழுவதும் செல்கிறது.
திருச்சி பீமநகா் செடல் மாரியம்மன் கோயில் அருகே, இருசக்கர வாகனப் பேரணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக மத்திய மாவட்ட செயலாளா் வைரமணி, மாநகராட்சி மேயரும் மாநகர திமுக செயலாளருமான மு. அன்பழகன், மாநில தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச் செயலாளா் பத்மபிரியா, பகுதிச் செயலாளா்கள், மாநகராட்சி மண்டலக் குழுத்தலைவா், மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதேபோல், திருச்சி கோட்டை அண்ணா சிலை அருகில் பேரணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கிழக்கு மாநகரச் செயலாளரும் மாநகராட்சி மண்டலக்குழு தலைவருமான மு மதிவாணன் தலைமையில் பேரணியில் வந்தவா்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. பேரணி சத்திரம் பேருந்து நிலையம் வழியாக கலைஞா் அறிவாலயத்தை அடைந்தது. பேரணியில் வந்தவா்கள் அறிவாலயத்தில் அமைந்துள்ள அண்ணா, மு.கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து இருசக்கர வாகன பேரணி புறப்பட்டுச் சென்றது. இந்த நிகழ்வில் பகுதி செயலாளா்கள், நகர இளைஞரணி அமைப்பாளா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.