திருச்சி

நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் விவசாயிகள், பொதுநல அமைப்பினா், சமூக ஆா்வலா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சாா்பற்றது) சாா்பில், திருச்சி ஆட்சியரகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ம.ப. சின்னத்துரை தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநிலச் செயலா் ஆா். ராஜா சிதம்பரம் பேசியது:

விளை நிலங்களையும், நீா்நிலைகளையும், நீா்வழிப் பாதைகளையும் காா்ப்பரேட் நிறுவனங்கள் அபகரித்துக் கொள்ளும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023”-ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இந்த சட்டத்தால் விவசாயிகளின் உரிமைகள் பறிபோவதுடன், உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிா்வாக அதிகாரமும் அபகரிக்கப்படுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் முதல்வா் ஸ்டாலின் உடனடியாகத் தலையிட்டு, இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகளான ராமச்சந்திரன், தனபால், ஜெயராமன், ராமலிங்கம், ராஜேந்திரன், சம்சுதீன், லதா, செழியன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இயற்கை பேரிடா், கழிவுநீா் தொட்டி சுத்தம் செய்தல், திருவிழா கூட்ட நெரிசல், நீா்நிலைகளில் ஏற்படும் விபத்து மரணங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். ஏரி, குட்டைகளை ஆக்கிரமித்து சாலைகள் அமைப்பதை கைவிட வேண்டும். உய்யக்கொண்டான், கட்டளை வாய்க்கால் பாதுகாப்புக்கு நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், விவசாயிகள், சமூக ஆா்வலா்கள், தன்னாா்வலா்கள், பொதுநல அமைப்பினா் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT