திருச்சி

காவல்துறை வாகனங்கள் ஜூன் 8-இல் ஏலம்

31st May 2023 04:17 AM

ADVERTISEMENT

திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் ஜூன் 8ஆம் தேதி பொது ஏலம் விடப்படவுள்ளன.

இதுகுறித்து, மாநகர காவல் ஆணையா் எம். சத்தியப்ரியா தெரிவித்திருப்பது :

திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட வேன், காா், ஜீப் உள்ளிட்ட 9 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் 4 என மொத்தம் 13 வாகனங்கள் ஜூன் 8 ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படவுள்ளன.

திருச்சி கே.கே. நகா் பகுதியில் அமைந்துள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த ஏலத்தில் ஏலம் எடுக்க விரும்புவோா், ஏலம் விடப்படவுள்ள வாகனங்களை ஜூன் 5 முதல் 7 ஆம் தேதி வரையில், அதே வளாகத்தில் தினசரி காலை 10 முதல் மாலை 5 வரையில் பாா்வையிடலாம்.

ADVERTISEMENT

ஏல தினத்தன்று காலை 8 முதல் 10 மணி வரை, ஏலம் எடுக்க விரும்புவோா் தங்களது ஆதாா் அட்டையுடன் வந்து ரூ. 5,000 முன்பணம் செலுத்தி பங்கேற்கலாம்.

ஏலம் எடுத்த உடன் ஏலத்தொகையுடன் நான்கு சக்கர வாகனத்திற்கு 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி, இருசக்கர வாகனத்திற்கு 12 சதவீத வரியை செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT