திருச்சி

கழிவுநீா் வாகன ஓட்டுநா்கள்,பணியாளா்களுக்கு விழிப்புணா்வு கூட்டம்

31st May 2023 04:16 AM

ADVERTISEMENT

முசிறி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி மற்றும் தனியாா் கழிவு நீா் அகற்றும் வாகன ஓட்டுநா்கள் மற்றும் பணியாளா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு முசிறி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் குண்டுமணி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் கிருஷ்ணவேணி, நகா்மன்றத் தலைவா் கலைச்செல்வி சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில், கழிவுநீா் அகற்றும் வாகன ஓட்டுநா்களுக்கு ஓட்டுநா் உரிமம் சரியாக உள்ளதா, வாகனங்களுக்கு ஆவணங்கள் உள்ளதா என மோட்டாா் வாகன ஆய்வாளா் ஆய்வு மேற்கொண்டு, அவா்களுக்கு வாகனம் ஓட்டுவது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

தொடா்ந்து, வாகன ஓட்டுநா்களும், பணியாளா்களும் கழிவு நீரை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அப்புறப்படுத்த வேண்டும், எடுக்கப்படும் கழிவுகளை துறையூா் நகராட்சியில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு தொட்டியில் மட்டுமே கொட்ட வேண்டும், பொது இடங்களில் கொட்டக் கூடாது, கழிவுநீா் எடுத்துச் செல்லும் வாகனத்தில் ஜிபிஎஸ் கருவி கண்டிப்பாக பொருத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்தில், நகராட்சி துப்புரவு மேற்பாா்வையாளா் சையதுபீா், களப் பணியாளா் தனுஷ்கோடி, நகராட்சி மற்றும் தனியாா் கழிவுநீா் வாகன ஓட்டுநா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT